Care at NUH

Hypoglycemia (low blood glucose tamil)

2024/06/25
இரத்தச் சர்க்கரை குறைவு (Hypoglycemia) பற்றி நோயாளிக்குத் தகவலளிக்கும் கையேடு
இரத்தச் சர்க்ககர குகறவு (Hypoglycemia) பற்றி ந ோயோளிக்குத் தகவைளிக்கும் ககநயடு

உங்கள் இரத்தச் சர்க்கரை 4.0 mmol/L (70 mg/dl) அளவுக்குக் குறைவாகும்போது(குறையும்போது) இரத்தச் சர்க்கரை குறைவு ஏற்படுகிறது. உங்களுக்கு வழக்கமான அறிகுறிகள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.

Hypoglycemia symptoms

இரத்தச் சர்க்கரைக் குறைவுக்குச் சிகிச்சை செய்யாமல் விட்டுவிட்டால்(புறக்கணித்தால்) ஆபத்தாகிவிடலாம். சுயநினைவு இழக்கப்படலாம். ஒருவர் சுயநினைவை இழந்துவிட்டால், உடனடியாக அவசர மருத்துவ வாகனத்தை அழையுங்கள். அவருக்கு எந்தவோர் உணவோ பானமோ கொடுக்காதீர்கள்.

Back to Top

உங்களுக்கு இரத்தச் சர்க்கரைக் குறைவு இருப்பதாகச் சந்தேகம் எழுந்தால் என்ன செய்வது?
​உங்களுக்கு இரத்தச் சர்க்கரைக் குறைவு இருப்பதாகச் சந்தேகம் எழுந்தால் என்ன செய்வது?
படிநிலை 1: பரிசோதனை

Finger prick test

  • உங்கள் இரத்தச் சர்க்கரை 4 mmol/L அளவுக்கும் குறைவாக இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.。
  • உங்களிடம் இரத்த குளுக்கோஸ (குளுக்கோஸ்) மீட்டர் இல்லாவிட்டால், படிநிலை 2-க்குச் செல்லுங்கள்
படிநிலை 2: இனிப்பு

Sugar

  • உங்கள் இரத்தச் சர்க்கரை அளவை வேகமாக உயர்த்த, விரைவாகச் செயல்படும் மாவுச்சத்து/சர்க்கரை 15 கிராம் உட்கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக:
    • 1 மேசைக்கரண்டி (அல்லது 3 தேக்கரண்டி) சர்க்கரை அல்லது
    • ½ பொட்டலம் (125மி.லி.) இனிப்பான பானம் ("குறைவான இனிப்பு" வகைகள் அல்ல) அல்லது
    • ½ டின் வழக்கமான (டாயட் வகை அல்ல) மென்பானம் அல்லது
    • 4 முதல் 7 மென் மிட்டாய்கள் (சர்க்கரை இல்லாதவை அல்ல) அல்லது
    • 3 குளுக்கோஸ் மாத்திரைகள்

தயாராக இருங்கள்; விரைவாகச் செயல்படும் இந்த மாவுச்சத்து உணவை/சர்க்கரையை எப்போதும் கையோடு வைத்திருங்கள்

சாக்லட் போன்ற கொழுப்பு அதிகமுள்ள உணவைத் தவிர்த்திடுங்கள். உங்கள் இரத்தத்தில் சர்க்கரை சேர்வதைக் கொழுப்பு மெதுவாக்கும்

படிநிலை 3: மறுபரிச்சோதனை

Carbohydrate

  • உங்கள் இரத்தச் சர்க்கரை அளவை 15 நிமிடத்திற்குப் பிறகு மறுபடியும் பரிசோதித்துப் பாருங்கள்.
    • இரத்தச் சர்க்கரை இன்னமும் (இன்னும்) 4 mmol/L அளவுக்குக் குறைவாக இருந்தால், படிநிலை 2-ஐ மறுபடியும் செய்யுங்கள்
  • இரத்தச் சர்க்கரை 4 mmol/L அளவுக்கு மேலாக இருந்தால், மெதுவாகச் செயல்படும் மாவுச்சத்து உணவை உட்கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக:
    • உங்களது அடுத்த வேளை உணவு அல்லது
    • 1 துண்டு ரொட்டி அல்லது
    • 3 துண்டு சாதாரண கிராக்கர் அல்லது
    • 1 குவளை கொழுப்பு குறைவான பால் (250மி.லி.).

உங்களது சுகாதாரப் பராமரிப்புக் குழுவின் கவனத்திற்காக, இரத்தச் சர்க்கரை அளவுகள், நிகழ்வுகள் அனைத்தையும் குறித்து வையுங்கள். எப்போதுமே இரத்தச் சர்க்கரை குறைவுக்கான காரணத்தை அல்லது தூண்டுகோலைக் கண்டறிய முயற்சி செய்யுங்கள்.

Back to Top

பொதுவான காரணங்கள்
பொதுவான காரணங்கள்
  • உணவுவேளைகளைத் தாமதப்படுத்துவது அல்லது சாப்பிடாதிருப்பது
  • உணவில் மிகவும் குறைவான மாவுச்சத்து
  • வெறும் வயிற்றில் மதுபானம் குடிப்பது
  • அளவுக்கதிகமான இன்சுலின் / நீரிழிவு மருந்து
  • இன்சுலின்/நீரிழிவு மருந்து எடுக்கும் நேரமும் உணவுவேளைகளின் நேரமும் பொருந்தவில்லை
  • வழக்கத்தைவிட அதிக சுறுசுறுப்பாக இருங்கள்
  • சளிக்காய்ச்சல், நச்சுணவு, சிறுநீர்ப்பாதையில் நோய்த்தொற்று போன்ற கிருமித்தொற்றுகளால் பசி எடுக்காதிருப்பது.

Back to Top

இரத்தச் சர்க்கரைக் குறைவைத் தடுப்பது எப்படி?
இரத்தச் சர்க்கரைக் குறைவைத் தடுப்பது எப்படி?
  • உணவுவேளைகளைத் தாமதப்படுத்தவோ அல்லது சாப்பிடாதிருக்கவோ (உண்ணாமல் இருப்பது) கூடாது. சமயக் காரணங்களுக்காக விரதம் இருக்கத் தொடங்கும் முன், உங்களது சுகாதாரப் பராமரிப்புக் குழுவிடம் கலந்து பேசுங்கள்
  • வழக்கமான உணவுவேளைகளில் பொருத்தமான அளவில் மாவுச்சத்து உணவை உண்ணுங்கள்
  • உங்களுக்குப் பசி எடுக்காவிட்டால் (½ அளவு), குளுசிமா, ஐசோகெல் அல்லது நியூட்ரன் போன்ற நீரிழிவு ஊட்டச்சத்து உணவைச் சேர்த்துக்கொள்ளுங்கள். மருந்துகளின் அளவில் மாற்றம் செய்வது குறித்து உங்களது சுகாதாரப் பராமரிப்புக் குழுவிடம் நீங்கள் ஆலோசனை கேட்க வேண்டியிருக்கலாம்.
  • மதுபானம் உட்கொள்வதைக் கட்டுப்படுத்துங்கள். சாப்பிடாமல் மதுபானம் குடிக்காதீர்கள்
  • ஒவ்வொரு நாளும் சரியான நேரத்தில் சரியான அளவில் இன்சுலின் ஊசி போட்டு, சரியான அளவில் நீரிழிவு மருந்தை உட்கொள்ளுங்கள்
  • உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு அடிக்கடி குறைவாக இருந்தால், உங்களது நீரிழிவு மருந்து/இன்சுலின் அளவில் மாற்றம் செய்வது குறித்து உங்களது சுகாதாரப் பராமரிப்புக் குழுவிடம் நீங்கள் ஆலோசனை கேட்க வேண்டியிருக்கலாம்
  • உடற்பயிற்சி செய்யும்போது சிந்தித்துச் செயல்படுங்கள். கடுமையானப் பயிற்சிக்கு முன்பாகத் தின்பண்டம் சாப்பிடுங்கள். நீங்கள் திட்டமிடும் உடற்பயிற்சியைச் செய்வதற்கு முன்பாக, நீரிழிவு மருந்தின் அளவைக் குறைப்பதுக் குறித்து உங்கள் மருத்துவரிடம் நீங்கள் ஆலோசனைக் கேட்க வேண்டியிருக்கலாம்
  • கிருமித்தொற்றின்போது இரத்தச் சர்க்கரை அளவு குறைவாக அல்லது அதிகமாகக்கூட என்பதால் பரிசோதித்துப் பாருங்கள். நீங்கள் பாதிக்கும் குறைவாக உணவு சாப்பிட்டு, இரத்தச் சர்க்கரை அளவும் அதிகமாக இல்லாவிட்டால், ஊட்டச்சத்து உணவை உட்கொள்ளுங்கள். உங்கள் மருத்துவரிடம் முன்கூட்டியே செல்லுங்கள்.

Back to Top

Last updated on
Best viewed with Chrome 79.0, Edge 112.0, Firefox 61.0, Safari 11
National University Health System
  • National University Hospital
  • Ng Teng Fong General Hospital
  • Alexandra Hospital
  • Jurong Community Hospital
  • National University Polyclinics
  • Jurong Medical Centre
  • National University Cancer Institute, Singapore
  • National University Heart Centre, Singapore
  • National University Centre for Oral Health, Singapore
  • NUHS Diagnostics
  • NUHS Pharmacy
  • Yong Loo Lin School of Medicine
  • Faculty of Dentistry
  • Saw Swee Hock School of Public Health
Back to Top